முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்தனர். ஆளுநர் மாளிகையில் சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பை கவனித்துவரும் வித்யாசாகர் ராவ் விடைபெறுவதால் மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் அவரை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வித்யாசாகர் ராவிற்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா மாநில ஆளுநரான பன்வாரிலால் புரோகித் தமிழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். பன்வாரிலால் வரும் 6 ஆம் தேதி புதிய ஆளுநராக பதவியேற்க உள்ளார்.