மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை நாடு முழுவதிலும் உள்ள ஆறுகளில் கரைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக பாஜக மாநிலத் தலைவர்கள் அனைவரிடமும் அஸ்தி அடங்கிய கலசங்கள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்திக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். முன்னதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் தலைவர் பாரிவேந்தர், வாஜ்பாய் அஸ்திக்கு மரியாதை செலுத்தினார்.
Read Also -> நிவாரண முகாமில் தூங்கிய மத்திய இணை அமைச்சர்
இதேபோல் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரான இல.கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வாஜ்பாய் அஸ்திக்கு மரியாதை செலுத்தினர்.