தமிழ்நாடு

9ம் வகுப்பு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை: ஆன்லைன் வகுப்பு காரணமா?

webteam

சென்னையில் 9-ம் வகுப்பு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை பள்ளிகரணை அடுத்த மேடவாக்கம், புஷ்பா நகர், வினோத் தெருவில் வசித்து வருபவர் செல்வகுமார் - சுந்தரி தம்பதி. இவர்களது இளைய மகன் ஜெய்கார்த்திக்(14) செம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஜெய்கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் ஆன்லைன் வகுப்பு பிடிக்காததால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கொரோனா காலகட்டம் என்பதால் பள்ளிகள் திறக்கப்படாததால் தினந்தோறும் 6 மணிநேரம் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்ததாக பெற்றோர் கூறுகின்றனர். ஆன்லைன் வகுப்பு பிடிக்கவில்லை என ஜெய்கார்த்திக் தனது பாட்டியிடம் தொலைபேசியில் இறுதியாக கூறியதாக தெரிகிறது.

ஆன்லைன் வகுப்பில் இன்று தேர்வு இருந்ததாக கூறப்படுகிறது. அப்படி இருந்த நிலையில் இன்று மதியம் 3 மணியளவில் ஜெய்கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060