+2 பொதுத்தேர்வு
+2 பொதுத்தேர்வு கோப்புப்படம்
தமிழ்நாடு

All the best மாணவர்களே... தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்!

PT WEB

தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வுகள் மார்ச் 1 ஆம் தேதி (இன்று) தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இத்தேர்வுகளை 7,72,000 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். இதற்காக 3,302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,534 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் தேர்வுகளை எழுதுகிறார்கள். பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் அச்சமின்றி தேர்வெழுத வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தேர்வு மையங்களில் தேர்வு நடத்தும் பணியில் 43,200 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தேர்வு முறையாக நடத்தப்படுவதை கண்காணிக்க, 3,200 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாளில் வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு 875 வழித்தடங்களில் காவல்துறை பாதுகாப்போடு கொண்டு செல்லப்படும். முதல் தேர்வாக மொழிப்பாடமும், மார்ச் 5 ஆம்தேதி ஆங்கிலத்தேர்வும் நடைபெற உள்ளது.