தமிழ்நாடு

வந்தவாசி அருகே சிறுமியை கேலி செய்ததாக இருதரப்பு மோதல்

வந்தவாசி அருகே சிறுமியை கேலி செய்ததாக இருதரப்பு மோதல்

Rasus

வந்தவாசி அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளாரில் நேற்றிரவு சிறுமி ஒருவர் விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது வேறு பிரிவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமியை கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இரு பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே இருபிரிவினர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். கற்களை கொண்டும், கட்டைகளை கொண்டும் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தாக்குதலில் ஏழுமலை, ஐய்யனாரப்பன் ஆகியோரின் டீ கடைகளும், சந்தோஷ் என்பவரின் குளிர்பான கடையும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனையடுத்து இரு பிரிவைச் சேர்ந்த 40 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து கைது செய்தவர்களை விடுதலை செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்தவாசி- திண்டிவனம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.