வந்தே பாரத் ரயில்
வந்தே பாரத் ரயில் PT
தமிழ்நாடு

பாரத் மாதாகி ஜே Vs ஜெய் பீம்; வந்தே பாரத் ரயில் வரவேற்பில் பாஜக - விசிக இடையே தள்ளுமுள்ளு!

webteam

திருநெல்வேலியில் இருந்து சென்னை வரை செல்வதற்கான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கி வைத்தார். இதனையடுத்து இன்று மாலை அரியலூர் ரயில் நிலையத்திற்கு வந்த வந்தே பாரத் ரயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.

இந்நிலையில் அரியலூர் வந்த வந்தே பாரத் ரயிலுக்கு சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் கொடி அசைக்க சென்னையை நோக்கி வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. அதே ரயிலில் ஏறி தொல்.திருமாவளவன் சென்னைக்கு பயணத்தை தொடங்கினார்.

பாரத் மாதாகி ஜே, ஜெய் பீம் என முழக்கமிட்ட பாஜக-விசிகவினர்!

அப்போது ரயில் கிளம்பிய போது பாரதிய ஜனதா கட்சியினர் பாரத மாதாவுக்கு ஜெ என கூறி முழக்கமிட்டதால், உடனடியாக அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜெய் பீம் என முழக்கமிட தொடங்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரையும் தள்ளி மோதல் ஏற்படாமல் தடுத்து அனுப்பி வைத்தனர்.

வந்தே பாரத்

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் கேட்ட போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாளவளன் ரயிலில் ஏற சென்ற போது அவர் காதின் அருகே பாஜகவினர் பாரத் மாதாவுக்கு ஜெ என முழக்கமிட்டனர் என குற்றம் சாட்டினர். பின்னர் இது குறித்து பா‌.ஜ.க வினரிடம் கேட்ட போது நாங்கள் பாரத மாதாவுக்கு ஜெ என கூறிய போது, அவர்கள் ஜெய் பீம் என முழக்கமிட்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது என தெரிவித்தனர்.