தமிழ்நாடு

சென்னை மாநகரப் பேருந்துகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்கும் - அதிகாரி தகவல்!

சென்னை மாநகரப் பேருந்துகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்கும் - அதிகாரி தகவல்!

JustinDurai

சென்னையில் நாளை முதல் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்கும் என்று மாநகர பேருந்து அதிகாரி புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.  

தமிழகம் முழுவதும் நாளை முதல் அந்தந்த மாவட்டத்திற்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தலைநகர் சென்னையில்  நாளை முதல் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்கும் என்று மாநகர பேருந்து அதிகாரி 'புதிய தலைமுறை'க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.  

மேலும் பேருந்து ஓட்டுனர் மற்றும்  நடத்துனர் பணிக்கு வரும் முன்பாக உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படவேண்டும்; பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்; பேருந்து நிறுத்தங்களில் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என்றும் மாநகர பேருந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.