தமிழ்நாடு

சினிமா, சீரியல்கள் மக்களின் மனநிலையை கெடுக்கின்றன: நீதிபதி கிருபாகரன்

சினிமா, சீரியல்கள் மக்களின் மனநிலையை கெடுக்கின்றன: நீதிபதி கிருபாகரன்

rajakannan

சினிமாவும், தொலைக்காட்சித் தொடர்களும் மனிதனுடைய மனநிலையை கெடுக்கின்றன என்று நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்தார்.

மனநலம் குன்றிய 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நடைபெற்றது. விசாரணையின் போது, பெண்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி கிருபாகரன், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

அண்மைக்காலமாக பல இடங்களில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது; பாலியல் வன்கொடுமைகளை தடுக்க போதிய நடவடிக்கை இல்லை என்றும்  நீதிபதி கிருபாகரன் கவலை தெரிவித்தார். மேலும், சினிமாவும், தொலைக்காட்சித் தொடர்களும் மனிதனுடைய மனநிலையை கெடுக்கின்றன என்றும் அவர் கூறினார்.