தமிழ்நாடு

காலாவதியான குளிர்பானங்களால் பாதிப்படைந்த சிறுவர்கள்!

காலாவதியான குளிர்பானங்களால் பாதிப்படைந்த சிறுவர்கள்!

webteam

விருத்தாசலத்தில் காலாவதியான குளிர்பான பாக்கெட்டுகளை குடித்து சிறுவர்கள் பாதிப்படைந்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காலாவதியான குளிர்பான பாக்கெட்டுகளை முறையாக அழிக்கப்படாமல், குடியிருப்புப் பகுதியில் கொட்டப்பட்டுள்ளது. இதனை அப்பகுதியில் விளையாடும் சிறுவர்கள் எடுத்து பருகியுள்ளனர். இதனால் அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப் பிரச்னை உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. 

இதேபோல் கால்நடைகளுக்கும் உடல்உபாதை ஏற்பட்டது. அங்குள்ள பெரியார் நகர் பகுதிவாசிகள் இந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். ஆபத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.