சென்னையில், குழந்தைகள் தின விழா எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இதனையடுத்து பள்ளி சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஓவிய கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எழுப்பூர் அரசு அருங்காட்சியகத்தை உலக தரத்திற்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.