தமிழ்நாடு

கொட்டித்தீர்த்த மழை - ஆட்டம் போட்ட சிறுவர்கள்

கொட்டித்தீர்த்த மழை - ஆட்டம் போட்ட சிறுவர்கள்

Sinekadhara

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இடி மின்னலுடன் பெய்த கனமழையில் சிறுவர்கள் ஆட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, காந்திநகர், கோபாலபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. கனமழையில் சிறுவர்கள் ஆனந்த குளியல் போட்டனர். தேங்கிய நீரில் சிறுவர்கள் சிலர் நீச்சல் அடித்தும் மகிழ்ந்தனர். திருவண்ணமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டாரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. கண்ணமங்கலம், படவேடு, சந்தவாசல், களம்பூர், கேளூர் உள்ளிட்ட இடங்களில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு முழுவதும் நீடித்த மழையால், சாலைகள் எங்கும் வெள்ளம் போல் காட்சியளித்தது. அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மூன்று மணி நேரமாக மழை கொட்டித்தீர்த்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.