தமிழ்நாடு

சுர்ஜித் மீட்புப் பணி: மீண்டும் லேசான மழை !

சுர்ஜித் மீட்புப் பணி: மீண்டும் லேசான மழை !

Rasus

குழந்தை சுர்ஜித் மீட்புப் பணி நடைபெறும் இடத்தில் லேசான மழை பெய்து வருகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது.

பின்னர்  70 அடி ஆழத்திற்குச் சென்ற குழந்தை, அதன்பின் 85 அடி ஆழத்திற்கு சென்றான். இந்நிலையில் தற்போது குழந்தை மேலும் இறங்கி 100 அடிஆழத்திற்குச் சென்றுவிட்டான். குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக்கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும். இதனிடையே 26 மணி நேரத்தை கடந்து, தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குழந்தையை மீட்க போராடி வரும் நடுகாட்டுப்பட்டியில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு படையினர் ஆழ்துளை கிணற்றுக்கு மேல் ஒரு தார்பாயை கட்டி மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று நாகூர், ஏர்வாடி தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது.