சென்னையில் 12 வயது சிறுமியை 10க்கும் அதிகமானோர் கடந்த ஏழு மாத காலமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த கொடூரம் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது 17 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. மாநில குற்றவியல் ஆவண காப்பத்தில் இருந்து பெற்றப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வழக்குகள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
போக்சோ சட்டமும், வழக்குகளும்
2016ம் ஆண்டில் மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் 1,567 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில், அதிகபட்சமான சென்னையில் இருந்து 156 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக, விழுப்புரம் (105), வேலூர் (99) மாவட்டங்களில் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை மகிளா நீதிமன்றத்தில் அதிகபட்சமாக 77 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 180 வழக்குகள் எஃப்.ஐ.ஆர் நிலையிலேயே உள்ளன. செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் 75 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 53 வழக்குகள் போலீசாரிடம் ஆவணங்கள் கேட்டு திரும்ப பெறப்பட்டுள்ளன. இந்த நீதிமன்றத்தில் 200 வழக்குகள் எஃப்.ஐ.ஆர் நிலையிலேயே உள்ளன.
வழக்குகள் நிலவரம்:-
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்:-
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைப் பொறுத்தவரை மாநில குற்றவியல் ஆவணங்களில் 2016ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக குற்றங்கள் நடைபெற்றுள்ளன. தூத்துக்குடியில் குழந்தைகளுக்கு எதிராக 235 குற்றச்செயல்கள் அரங்கேறியுள்ளன. தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக விழுப்புரம்(231), சென்னை (230) நெல்லை (179), திருச்சி (145) இடங்களை பிடித்துள்ளன. கடைசி இடத்தில் கரூர் மாவட்டம் உள்ளது. கரூரில் குழந்தைகளுக்கு எதிராக 13 குற்றச்செயல்களே நடைபெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2016ம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்(மாவட்ட வாரியாக):
தூத்துக்குடி - 235
விழுப்புரம் - 231
சென்னை - 230
நெல்லை - 179
திருச்சி - 145
மதுரை - 125
வேலூர் - 107
தர்மபுரி - 96
நாமக்கல் - 86
விருதுநகர் - 84
தி.மலை - 79
தேனி - 79
சிவகங்கை - 75
கன்னியாகுமரி - 75
சேலம் - 72
கிருஷ்ணகிரி - 66
கடலூர் - 53
திண்டுக்கல் - 48
கோவை - 38
ஈரோடு - 36
அரியலூர் - 33
காஞ்சிபுரம் - 32
ராமநாதபுரம் - 31
நாகை - 31
திருவள்ளூர் - 30
திருப்பூர் - 30
திருவாரூர் - 27
தஞ்சாவூர் - 25
பெரம்பலூர் - 19
நீல்கிரீஸ் - 15
புதுக்கோட்டை - 15
கரூர் - 13