தமிழ்நாடு

சிறுமிக்கு திருமணம்: மாப்பிள்ளை குடும்பத்தை தேடுது போலீஸ்!

சிறுமிக்கு திருமணம்: மாப்பிள்ளை குடும்பத்தை தேடுது போலீஸ்!

Rasus

திருச்செங்கோட்டில் சிறுமியை திருமணம் செய்த மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கும், திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பூபதி என்ற விசைத்தறி தொழிலாளிக்கும் அப்பகுதி மண்டபத்தில் திருமணம் நடந்தது. இதுபற்றி ஈரோடு சமூக நலத்துறைக்கு சிலர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சமூகநலத்துறை அலுவலர் திலகம், திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் சுகந்தி மற்றும் காவல்துறையினர் திருமண மண்டபத்தில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மணப்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி ஆகாதது தெரியவந்தது. அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே மணமகன் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவானர்கள். மணப்பெண்ணான சிறுமியை சைல்டு லைன் அமைப்பினர் மீட்டதுடன் ஈரோடு சமூகலநலத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் சிறுமியை திருமணம் செய்த மணமகன் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினரை திருச்செங்கோடு நகர காவல்துறையினர் தேடி வருகின்றனர்.