திருத்தணியில் ஆசிரியர்கள் கொடுத்த குடற்புழு மாத்திரையால் 4 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருத்தணியை சேர்ந்த சரவணன் என்பவரின் 9 வயது மகள் அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். கடந்த வியாழன் அன்று சிறுமிக்கு பள்ளியில் குடற்புழு மாத்திரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அன்று மாலை மயக்கம் அடைந்த சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிறுமியின் இறப்பிற்கு குடற்புழு நீக்க மாத்திரை காரணமல்ல என்று நோய் தடுப்பு பிரிவு இயக்குநர் குழந்தை சாமி விளக்கம் அளித்துள்ளார். ஆனால் குடற்புழு மாத்திரையை உட்கொண்டதாலே சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாக அவரது தயார் கூறியுள்ளார்.