தமிழ்நாடு

பிபின் ராவத்துடன் உயிரிழந்த 11 ராணுவ அதிகாரிகளின் விவரம்

JustinDurai
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மட்டுமின்றி உயிரிழந்த 11 ராணுவ அதிகாரிகள் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளன.
பிபின் ராவத்துடன் இரு மூத்த ராணுவ அதிகாரிகள், ஐந்து விமானப் படை அதிகாரிகளும், கமாண்டோ படை வீரர்களும் அந்த ஹெலிகாப்டரில் உடன் சென்றிருந்தனர். பிரிகேடியர் லிட்டர், லெஃப்டினென்ட் கர்னல் ஹெச்.சிங், விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுஹான், ஸ்குட்ரான் லீடர் குல்தீப் சிங், ஜூனியர் வாரண்ட் ஆபீசர்ஸ் தாஸ் மற்றும் பிரதீப், ஹவில்தார் சத்பால், கமாண்டே வீரர்கள் குருசேவக் சிங், ஜிதேந்தர், விவேக் மற்றும் தேஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
சூலூர் விமானப் படை தளத்தில் ஹெலிகாப்டர் பிரிவுக்கு தலைமை அதிகாரியான விங் கமாண்ட் பிரித்வி சிங் சவுஹானும், ஸ்குட்ரான் லீட் குல்தீப்பும் தான் ஹெலிகாப்டரை ஓட்டிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
குரூப் கேப்டன் வருண் சிங், முப்படை தலைமை தளபதியை வரவேற்க சூலூர் வந்து, அங்கிருந்து அவருடன் ஹெலிகாப்டரில் பயணித்தபோது விபத்தில் சிக்கினார். 2020 ஆம் ஆண்டு தேஜாஸ் போர் விமானத்தை அவசரமாக தரையிறக்கி பெரும் விபத்தை தவிர்த்தவர். இதற்காக இந்த ஆண்டு சவுரிய சக்ரா விருது அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.