தமிழ்நாடு

ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : முதல்வர் எச்சரிக்கை

ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : முதல்வர் எச்சரிக்கை

webteam

ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல்லில் மாவட்ட வளர்ச்சிப்பணி, கொரோனா தடுப்புப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கோண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கொரோனா பரிசோதனை செய்யாவதர்களை அரசு விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தால் மக்கள் பிரதிநிதிகள் யார் வேண்டுமேனாலும் பங்கேற்கலாம்.

மதுரையை 2வது தலைநகராக்க வேண்டும் என்பது உதயக்குமார் கருத்து. அரசின் கருத்து அல்ல. நானும்தான் மத்திய அரசுக்கு பல கோரிக்கைகள் வைக்கிறேன். எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறார்களா? எதை நிறைவேற்ற முடியுமோ அதைத்தான் நிறைவேற்ற முடியும்.

ஹெச்.ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் நேற்றே காட்டமான பதிலை அளித்துவிட்டார். விலைமதிப்பில்லாத உயிரை அரசு காப்பாற்றிக்கொண்டிருக்கிறோம். அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் அதில் பங்கு உள்ளது.

இபாஸ் எதற்கு என்று எல்லோரும் கேட்கிறார்கள். ஒருவர் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் அங்கு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவரை எப்படி கண்டறிய முடியும். இபாஸ் இருப்பதால்தான் கொரோனா பரவல் இந்த அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.