பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுநீளக் கரும்பு, மூவாயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுதொடங்கிவைக்கிறார். பிற மாவட்டங்களில் அமைச்சர்கள் இப்பணியை தொடங்கி வைக்க உள்ளதாக தமிழக அரசுதெரிவித்துள்ளது.