முதல்வர் மு.க. ஸ்டாலின், பாசிச சக்திகள் குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சிக்கின்றன, ஆனால் நாம் அதற்கு இடமளிக்கக்கூடாது என திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். எஸ்ஐஆர் விவகாரத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, புதிய வாக்காளர்களை சேர்க்கவும், போலி வாக்காளர்களை தவிர்க்கவும் வலியுறுத்தினார்.
நம்மை நேர்வழியில் வீழ்த்த முடியாத பாசிச சக்திகள், குறுக்கு வழியில் காரியம் சாதிப்பதற்கு கடுகளவும் இடம் தரக்கூடாது என திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
காணொளியில் நடைபெற்ற திமுக மாவட்டச்செயலர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எஸ்ஐஆர் மூலம், 168 தொகுதிகளில் 10 சதவீதத்திற்கும்அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கும்மிடிப்பூண்டி தொகுதியின் முதல்வாக்குச்சாவடியில் 40 வாக்காளர்கள்நீக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் 4 பேர் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்புமூலமாக சேர்ந்தவர்கள் என்றும்தெரிவித்துள்ளார்.
ஒரே ஒருவர் தவறுதலாக விடுபட்டு இருந்தால்கூட ஃபார்ம்-6 படிவத்தை நிரப்பிக்கொடுத்து வாக்காளர் பட்டியலில்இணைக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அடுத்ததாக புதிய வாக்காளர்கள் இணைக்கப்படுவதையும் தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், போலி வாக்காளர்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். நமது உழைப்பை வீணாக்க எதிரிகள் கூட்டமும், வீணர்கள் கூட்டமும் முயற்சி செய்வார்கள் என்றும், அவற்றை புறந்தள்ளி தேர்தல் பணிஆற்றுங்கள் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
களத்தில் நாம் வலிமையாக இருப்பதாகவும், நமதுகூட்டணியே வெற்றிக் கூட்டணி என்றும் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு ஒருபோதும் அஞ்சாது எனதெரிவித்துள்ளார்.