மழைநீர் சேமிப்பு திட்டத்தை ஒவ்வொரு தனி மனிதனும் உளப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
மழைநீர் சேகரிப்பு தொடர்பாக அமைச்சர் வேலுமணியை தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமியும் வீடியோ மூலம் அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், மழை நீரை சேகரித்து தமிழ்நாடு வளமான பூமியாக தொடர்ந்திட ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மழைநீரின் அவசியம் குறித்து திருவள்ளுவரும், இளங்கோவடிகளும் எழுதியிருக்கும் பாடல்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த வீடியோவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக அமைச்சர் வேலுமணி மழைநீரை சேமிக்க வேண்டும் என்பது குறித்து வீடியோவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.