தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை மீதான வரியை குறைக்க வலியுறுத்தப்படும் : முதலமைச்சர் பழனிசாமி 

பெட்ரோல், டீசல் விலை மீதான வரியை குறைக்க வலியுறுத்தப்படும் : முதலமைச்சர் பழனிசாமி 

webteam

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் அதிமுகவின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அதிமுகவில் இருந்து விலகி அமமுகவிற்கு சென்றவர்கள் மீண்டும் இசக்கி சுப்பையா தலைமையில் தாய் கழகத்தில் இணைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானத்தில் தூத்துக்குடிக்கு வந்தார். 

அப்போது விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். கோதாவரி காவிரி இணைப்பிற்காக விரிவான திட்டம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். சேலம் உருக்காலை விவகாரம் பொதுப்பிரச்னை. இதில் பிற மாநிலங்களை போல் இணைந்து செயல்படுவோம். சேலம் உருக்காலையை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது என்ற அடிப்படையில் ஒன்றாக இணைந்து செயல்படுவோம். பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்தில் இணைய வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க அனைவரும் தாய் கழகத்தில் இணைய வேண்டும்.” எனத் தெரிவித்தார்.