தமிழ்நாடு

சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு

சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு

webteam

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து 90 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி‌ ‌உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி‌  வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தனூர் அணையின் இடது புற கால்வாயில் விநாடிக்கு 350 கன அடி தண்ணீரும், வலதுபு‌ற கால்வாயில் விநாடிக்கு ‌220 கன அடி தண்ணீரும், வரும் 7ஆம் தேதி முதல் மே 5ஆம் தேதி ‌வரை 90 நாட்களுக்கு திறக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என குறிப்பிட்டுள்ளார். திருக்கோவிலூர் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டின் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் இரண்டாம்போக சாகுபடிக்கு ‌1,200 மில்லி கனஅடி தண்ணீர் இரண்டு தவணைகளில் சாத்தனூர்‌ அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து இரண்டாம்போக புன்செய் பாசனத்திற்கு வரும் 4ம் தேதி முதல் 90 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.