வைகை பூர்வீக பாசன பகுதியில் உள்ள கண்மாய்களில் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசன பகுதி 2 மற்றும் 3ல் உள்ள 5 கண்மாய்களை நவம்பர் 14 முதல் 21 ஆம் தேதி வரை 1525 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வைகை பூர்வீக பாசன பகுதி 2க்கு நவம்பர் 23 முதல் 27 ஆம் தேதி வரை 631 மில்லியன் கன அடியும், பகுதி 1 ஐ சேர்ந்த 4 கண்மாய்களும் நவம்பர் 28 முதல் 30 ஆம் தேதி வரையிலும் நீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதர வைகை பூர்வீக பாசன பகுதி 1ஐ 348 மில்லியன் கன அடி மற்றும் பகுதி 1ல் உள்ள நிலையூர் கால்வாயில் தேவைக்கேற்ப திறந்து விடுவதற்கும் சேர்த்து வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளதாக தனது அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.