தமிழ்நாடு

முதல்வர் அறிவிப்புக்கு பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள்.

முதல்வர் அறிவிப்புக்கு பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள்.

webteam

ஜெயலலிதா மரணம் குறித்து விசா‌ரணைக் கமிஷன் அமைக்கப்படும், அவரது வீடு நினைவிடமாக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பிற்கு கோவை அதிமுகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கோவை ஓசூர் சாலையிலுள்ள அதிமுக அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் முதலமைச்சரின் அறிவி‌ப்பிற்கு வரவேற்பு தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களும் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய அம்மன் அர்ஜூனன், முதலமைச்ச‌ரின் இந்த அறிவிப்பை அதிமுகவினர் வரவேற்பதாகக் கூறினார்.