தமிழ்நாடு

காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம்: முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்

kaleelrahman

காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பல ஆண்டு கால கனவு திட்டமான காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணையை பிறப்பித்தது. திட்டத்தின் முதல் கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூரிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை ஆறாயிரத்து 971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் வெட்டப்படுகிறது.


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள குன்னத்தூர் கிராமத்தில் இன்று நடைபெறும் விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். இதையொட்டி குன்னத்தூர் கிராமத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மண்டல ஐஜி ஜெயராமன் தலைமையில் புதுக்கோட்டை எஸ்பி பாலாஜி சரவணன் கண்காணிப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.