தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!

webteam

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடத்துக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. 80 கோடி ரூபாய் செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவிடம், 15 மீ உயரம், 30.5 மீ நீளம், 43 மீ அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி இந்த நினைவிடத்தை திறந்து வைத்தார். இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவாறு தொண்டர்கள் சாலையில் அமர்ந்து பெரிய திரை மூலம் விழாவை கண்டு களித்தனர்.

முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர் ஆகியோர் ஒன்றாக ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.