பெருந்தலைவர் காமராஜரின் 115-வது பிறந்தநாளையொட்டி சென்னையில் அவரது உருவ படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு, அமைச்சர்கள் ஜெயக்குமார். கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இதேபோல் விருதுநகரில் உள்ள மணி மண்டபத்தில் மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர் சிவஞானம், காமராஜர் இல்லத்தில் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
கதர் ஆடை பயன்பாட்டை காமராஜர் ஊக்கப்படுத்தியதன் நினைவாக, அப்பகுதி மக்கள் ராட்டை சுற்றும் நிகழ்வில் ஈடுபட்டனர். கர்ம வீரரை நினைவு கூறும் விதமாக அவர் பயன்படுத்திய பொருட்கள், அவரது அரிய புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் உள்ள பல்வேறு கோயில்களில், அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.