தமிழ்நாடு

அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு - தமிழக அரசு

அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு - தமிழக அரசு

webteam

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கட்டணத்தை குறைத்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அரசு கேபிள் டிவி கட்டணம் 70 ரூபாயாக இருந்ததாகவும் டிஜிட்டல் முறை வந்த பிறகு சில இடங்களில் 200 ரூபாய்க்கு மேலாக வசூலிக்கப்படுவதாகவும் திமுக குற்றம் சாட்டி வந்தது. இதையடுத்து கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், அரசு கேபிள் டிவி கட்டணத்தை குறைத்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் ரூ. 130 உடன் சேர்த்து ஜிஎஸ்டி என்ற மாத சந்தா கட்டணம் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுவரை 35.12 லட்சம் இலவச செட்டாப் பாக்ஸ்கள் அரசு கேபிள் டிவி மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் வேலூர் மாவட்டம் நீங்கலாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.