தமிழ்நாடு

விருது வழங்கும் விழா... பாடல்கள் பாடிய முதலமைச்சர் பன்னீர்செல்வம்..!

webteam

திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் அறிஞர்களிடையே உள்ள நயம், சுவை, நகைச்சுவை, தமிழ் மொழியில் உள்ள சொல்லாற்றல் ஆகியவற்றை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் திரைப்பட பாடல்கள் மூலம் எடுத்துரைத்தார்.

திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில்‌ நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்று தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட அறிஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பன்னீர்செல்வம், தமிழ் மொழிக்கும், அதன் வளர்ச்சிக்கும் அ.தி.மு.க அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார். மேலும் தமிழ் அறிஞர்களிடையே உள்ள நயம், சுவை, நகைச்சுவை, தமிழ் மொழியில் உள்ள சொல்லாற்றல் ஆகியவற்றை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் திரைப்பட பாடல்கள் மூலம் எடுத்துரைத்தார். அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, நலம்தானா? நலம்தானா? போன்ற பாடல்களை விழாவில் பாடி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

மேலும் பேசிய அவர், ஜெயலலிதா காட்டிய வழியில் அரசு தொடர்ந்து செயல்படும் என தெரிவித்தார். அகவை முதிர்ந்த 50 தமிழ் அறிஞர்களுக்கு மருத்துவப்படி மற்றும் மாதம்தோறும் 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும்‌ ஆணையை பன்னீர்செல்வம் வழங்கினார்.