பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள "விடுப்பு செயலியை" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டார். அதன்படி வாரத்தில் ஒரு நாள் காவலர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள ஆணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், CLAPP என்ற விடுப்பு செயலியை பெருநகர காவல்துறை உருவாக்கியுள்ளது. இதனை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த செயலி மூலமாக, காவலர்கள் தாங்கள் எடுக்கும் விடுப்பின் விவரங்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செயலியில் பதிவு செய்யப்பட்டதும், விடுப்பு விவரங்கள், மேல் அதிகாரிகளுக்கு சென்று சேரும்.
இதையும் படிக்கலாம்: 'அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை' - டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை