முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துர்கா ஸ்டாலின் அமைச்சர் மா. சுப்ரமணியன் , அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனை பரிசோதனைக்காகவும் முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், ஜூலை 22,23 ஆகிய நாட்களில் கோவை , திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.