தமிழ்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் விஜயபாஸ்கரை நலம் விசாரித்தார் முதல்வர்!

கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் விஜயபாஸ்கரை நலம் விசாரித்தார் முதல்வர்!

JustinDurai

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் முதல்வர். 

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகிய மூவருக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மூவரும் சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்ததாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''மாண்புமிகு அமைச்சர் திரு.M.R.விஜயபாஸ்கர் அவர்கள், அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றுக்குள்ளான செய்தியறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். சிகிச்சை பெற்று வரும் மாண்புமிகு அமைச்சர்  விஜயபாஸ்கர் அவர்கள், அவரது மனைவி,மகள் ஆகியோர் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.