பொதுமுடக்கம் நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
7 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 31 ஆம் தேதியுடன் தமிழகத்தில் நிறைவடைகிறது. இதையடுத்து பொதுமுடக்கத்தை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பொதுமுடக்கம் நீட்டிப்பது குறித்தும், என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது குறித்தும், இபாஸ் நடைமுறை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சில தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை நீட்டிக்கலாம் எனவும் 99 சதவீதம் இபாஸ் அனுமதி கொடுக்கப்படுவதால் அந்த நடைமுறையையும் தொடரலாம் எனவும் தமிழக அரசு விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
4 மணிநேரம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.