தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

webteam

குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஹெர்னியா என்ற குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின் முதல்வர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.