தமிழ்நாடு

கொரோனாவுக்கு தலைமை காவலர் உயிரிழப்பு!

கொரோனாவுக்கு தலைமை காவலர் உயிரிழப்பு!

sharpana

சென்னை அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த மகாராஜன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 14 ஆம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதுவரை, இவருடன் சேர்ந்து 4 காவலர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

ஏற்கனவே, கடந்த 18 ஆம் தேதி யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் சக்திவேல் உயிரிழந்தார். நேற்று கோட்டூர்புரம் நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர் கருணாநிதி, ஜிடிபி அலுவலகத்தில் பணிபுரிந்த தலைமைக் காவலர் முருகேசன் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளனர்.