வருமான வரியில் மாற்றம் செய்ய வேண்டாம் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தனது நான்காவது பட்ஜெட்டை நாளை மறுநாள் மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளார். அவருக்கு ஆலோசனை கூறும் வகையில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆங்கிலப் பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார். வருமான வரி விகிதங்களைக் குறைக்காமல், அதற்கு பதிலாக சேவை வரியை குறைக்க ஜெட்லி முன்வர வேண்டும் என்று ப.சிதம்பரம் ஆலோசனை தெரிவித்துள்ளார். உற்பத்தி வரியைக் குறைத்தால் பொருட்களின் விலை குறைந்து தேவை பெருகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.