செய்தியாளர்: ஆர்.மோகன்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் பிரபல பிரியாணி கடை இயங்கி வருகிறது, இந்த கடையில் நேற்று மதியம் விருதாச்சலத்தைச் சேர்ந்த தம்பதியினர் பிரியாணி சாப்பிட சென்றள்ளனர். இதையடுத்து பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அதில் கரப்பான் பூச்சி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் கடை ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வாடிக்கையாளரின் மனைவி கர்ப்பிணியாக இருப்பதால் உடனடியாக அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவர்கள் உட்பட 10 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கர்ப்பிணி பெண் மட்டும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது,
பிரபல பிரியாணி கடை பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.