சிவகாசி தனியார் பொறியியல் தொழில்நுட்ப (AAA) கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்க (செஸ்) போட்டி- 18 மாவட்டங்களைச் சேர்ந்த 200 அணிகளின் 395 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்பு-போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கி கௌரவிப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி (AAA) தனியார் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்க (செஸ்) போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக 18 மாவட்டங்களை சேர்ந்த 200 அணிகளின் 395 வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியானது 5 பிரிவுகளில் மூன்று சுற்றுகளாக நடைபெற்றது. இப்போட்டியில் ஐந்து வயது முதல் 70 வயது உடையோர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.