தமிழ்நாடு

சென்னை: தேசியக் கொடியை நாக்கால் வரைந்து இளைஞர் உலக சாதனை முயற்சி

சென்னை: தேசியக் கொடியை நாக்கால் வரைந்து இளைஞர் உலக சாதனை முயற்சி

kaleelrahman

160 அடி நீளமுள்ள தேசியக் கொடியை நாக்கால் வரைந்து உலக சாதனை முயற்சியில் இளைஞர் ஈடுபட்டுள்ளார்.

சென்னை இராமாபுரம் தோட்டம் எம்ஜிஆர் இல்லத்தில் சிவகாசியை சேர்ந்த பிரவின் என்ற இளைஞர் கைகளை கைவிலங்கால் கட்டிக் கொண்டு தனது நாக்கால் தேசியக் கொடியை வரைந்து உலக சாதனை நிகழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரது முயற்சிக்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பேரன் ராமசந்திரன் உதவி வருகிறார்.

160 அடி நீளம், 3 மீட்டர் அகலம் கொண்ட நீண்ட தேசியக் கொடிக்கு தனது நாக்கினால் வர்ணம் தீட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் சாதனை புரிய, தொடர்ந்து 35 மணிநேரம் வரைய உள்ளார். நேற்று மாலையிலிருந்து வரைய தொடங்கியவர் தற்போது வரை வரைந்து வருகிறார். உலகிலேயே மிக நீளமான நாக்கை கொண்டவர் என்ற சாதனையை படைத்த இவர், 75-வது சுதந்திர தினத்தன்று நாக்கல் தேசியக் கொடியை வரைந்து சாதனை செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.