சென்னை வியாசார்பாடி பகுதியில், இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை வியாசார்பாடி எம்.கே.பி.நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சுரேஷ் நேற்றிரவு தனது நண்பருடன் வெளியே சென்றுள்ளார். நெடுநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், சாஸ்திரி நகரில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அங்கு நடத்திய விசாரணையில் சுரேஷின் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டதை கண்டு பிடித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலைக்கான பின்னணி குறித்தும், கொலையாளிகள் பற்றியும் துப்பு துலக்கி வருகின்றனர்.