செய்தியாளர்: ஆனந்தன்
சென்னை நந்தனம் எஸ்எம். நகரை சேர்ந்தவர் பாபு (40). இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவர், தேனாம்பேட்டையில் உள்ள அலங்கார கண்ணாடி விளக்குகள் விற்பனை செய்யும் கடையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் நேற்று இரவு டீ குடித்துவிட்டு பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பிளாட்பாரத்தில் மோதியதில் அங்கு அமர்ந்திருந்த பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அங்கு நின்று கொண்டிருந்த அலங்கார விளக்குகள் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் ரித்தேஷ் (45) விக்ரம் (28) தருண் சோலங்கி (31)ஆகிய மூன்று பேர் காயமடைந்து கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய தனியார் கூரியர் நிறுவன மேலாளர் அபிஸ் மற்றும் பூந்தமல்லியைச் சேர்ந்த அகமது (52) என்பவரை கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் காரை ஓட்டிய அபிஸ் குடிபோதையில் இல்லை என தெரியவந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்..