தமிழ்நாடு

உங்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா? - செய்தியாளர் கேள்விக்கு உதயநிதி சொன்ன பதில்

உங்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா? - செய்தியாளர் கேள்விக்கு உதயநிதி சொன்ன பதில்

kaleelrahman

திமுக இளைஞர் அணி தலைவரும், திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். மக்களின் கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது, “என்னோட தொகுதி மக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்தக் கொள்கிறேன். இது தலைவருக்கான வெற்றி, கலைஞருக்கான வெற்றி, தொகுதி மக்கள் என்னிடத்தில் நிறைய கோரிக்கைகள் கொடுத்திருக்கிறார்கள்.

உங்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற கேள்விக்கு... இன்று தேதி மே 3. இன்னும் நான்கு நாட்கள் காத்திருங்கள் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும். ஆட்சிக்கு வந்தவுடன் பொள்ளாச்சி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தீர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு... கண்டிப்பாக தலைவர் நடவடிக்கை எடுப்பார். முதலில் பொறுப்பை ஏற்கட்டும் அதன் பிறகு கட்டாயமாக நடவடிக்கை எடுப்பார்.