தமிழ்நாடு

சென்னை வன்முறை அதிர்ச்சியளிக்கிறது.. கமல்ஹாசன்

சென்னை வன்முறை அதிர்ச்சியளிக்கிறது.. கமல்ஹாசன்

Rasus

சென்னையில் நிகழ்ந்த வன்முறை அதிர்ச்சியளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர்களின் போராட்டத்தில் அரசியல் சாயம் பூசுவதை ஏற்க முடியாது என தெரிவித்தார். சென்னையில் நிகழ்ந்த வன்முறை மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என கூறியுள்ள அவர், தமிழர்களின் கலாசாரம் மீதான ஊடுருவலை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். உண்மையை யாராலும் மறைக்க முடியாது எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்காக மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றிருந்த போராட்டக்காரர்கள் வெளியேறிய பிறகு, சென்னையின் பல பகுதிகளிலும் நேற்று அசாதாரண சூழல் உருவானது. அடையாளம் தெரியாத நபர்களாலும், சமூக விரோத குழுக்களாலும் வன்முறையைத் தூண்டும் செயல்கள் அரங்கேறின. இதுதொடர்பாக 76 பே‌ர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.