தமிழ்நாடு

சென்னை வேப்பேரியில் 120 கிலோ மாவா பறிமுதல்

சென்னை வேப்பேரியில் 120 கிலோ மாவா பறிமுதல்

Rasus

சென்‌னை வேப்பேரி பகுதியில் 120 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சூளை பகுதியில் உள்ள விவி கோவில் தெருவில் வசித்து வரும் பான் குட்கா வியாபாரி பிரதேஷ் குமார் திவாரியின் வீட்டில் சோதனை மேற்கொண்டதில், அங்கு 120 கிலோ மாவா மற்‌றும் 50 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால், பிரதேஷ் குமார் திவாரி தப்பியோடிவிட்டார். அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை தொடர்பாக கடந்த இருநாட்களில் 610 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 421 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொத்தவால்சாவடி, ஏழுகிணறு, சௌகார்பேட்டை, மணலி, பல்லாவரம், பழவந்தாங்கல், அண்ணாநகர், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 12 ஆயிரத்து 305 குட்கா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குட்கா விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் சரக்கு வாகன உரிமையாளர்களுக்கு இதுதொடர்பாக எச்சரிக்கை தரப்பட்டுள்ளதாகவும், தடையை மீறி குட்கா பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.