exam cheating PT
தமிழ்நாடு

சென்னை: கஸ்டம்ஸ் தேர்வில் ஆள்மாறாட்டம்..ப்ளூடூத் பயன்படுத்தி தேர்வெழுதிய 29 பேர் - உ.பி. இளைஞர் கைது

கஸ்டம்ஸ் தேர்வில் ஆள்மாறட்டம் செய்து தேர்வெழுதிய உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை வடக்கு கடற்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

webteam

சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வின் போது அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 29 பேர் ப்ளூடூத் பயன்படுத்தி முறைகேடில் ஈடுபட்டதாக வடக்கு கடற்கரை காவல்துறையினர் கைது செய்தனர்.

arrested

கைது செய்யப்பட்ட 29 பேரும், சுங்கத்துறை அதிகாரிகளை ஏமாற்றி ப்ளூடூத் கருவியை பயன்படுத்தி தேர்வெழுதியது தெரியவந்தது இதையடுத்து கைது செய்யப்பட்ட 29 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் இதில், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷர்வன்குமார் என்பவர் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஷர்சிங் என்பவருக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதியது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, வடக்கு கடற்கரை காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.