தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிப்பு pt desk
தமிழ்நாடு

சென்னை | ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிப்பு - திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை மற்றும் புறநகரில் திமுகவினர் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து வந்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

PT WEB

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

தமிழ்நாட்டு எம்பிக்கள் நாகரிகமற்றவர்கள் என நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இழிவாக பேசியிரு;நதார். இதற்கு கண்டனம் தெரிவித்து பூவிருந்தல்லியில் கொடும்பாவியை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பூவிருந்தவல்லி ஒன்றிய திமுக சார்பில் கோயம்பேடு - பூவிருந்தவல்லி சாலையில் குவிந்த திமுகவினர் திடீரென ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புகைப்படத்தை செருப்பு மற்றும் துடப்பதால் அடித்து தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து தர்மேந்திர பிரதானின் கொடும்பாவியை ஊர்வலமாக இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர்.

இதனால் பூவிருந்தவல்லி கோயம்பேடு சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய கல்வித் துறை அமைச்சருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதியில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்ேமுந்திர பிரதானின் கொடும்பாவியை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.