தமிழ்நாடு

முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை

முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை

webteam

முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை சென்னை போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்களிடையே பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக  சென்னை காவல்துறை பல்வேறு  நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணாசாலையில் ஸ்பென்சர் சிக்னல் அருகில் அண்ணா சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராமதுரை தலைமையிலான போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசங்களை அவர்கள் வழங்கினர். அதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், அதனை மக்கள் பின்பற்றுவதற்கான முக்கியத்துவம் உள்ளிட்டவை தொடர்பாக வாகன ஓட்டிகளிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

177 மோட்டார் வாகன சட்டப்பிரிவு அடிப்படையில் ரூ. 100 அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் இன்னும் தொடங்காத நிலையில், முதற்கட்டமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரித்து வருதாக தெரிவித்தனர் .