தமிழ்நாடு

சென்னை: மீண்டும் ரூ. 100-ஐ தொட்ட தக்காளி விலை

சென்னை: மீண்டும் ரூ. 100-ஐ தொட்ட தக்காளி விலை

Veeramani

சென்னையில் தக்காளி விலை மீண்டும் நூறு ரூபாயை எட்டியுள்ளது.

ஆந்திரா, கர்நாடகா, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தக்காளியின் வரத்து குறைந்ததன் காரணமாக, விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது 40முதல் 50வாகனங்களில் மட்டுமே தக்காளி வருவதாகக் கூறுகின்றனர். கோயம்பேடு சந்தையில், நேற்று 70ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டுத் தக்காளி, தற்போது 80ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

80ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ நவீன் தக்காளி 90 ரூபாயாக அதிகரித்துள்ளது. சில்லரை விலையில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளி 100ரூபாய்க்கும், நவீன் தக்காளி 100 முதல் 110ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.