தமிழ்நாடு

குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து 50 சவரன் கொள்ளை

குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து 50 சவரன் கொள்ளை

webteam

சென்னை மாதவரத்தில் மின்வாரிய ஊழியர்‌கள் என கூறிக்கொண்டு வீடு புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகைகள்‌ கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மாதவரம் ராமச்ச‌ந்திரன் ‌‌நகரில் தாமோதரன் என்பவர் பணிக்கு‌ சென்றிருந்த நிலையில், மனைவி மற்றும் குழந்தை மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு வந்த நான்கு பேர், மின் வாரியத்தில் இருந்து வருவதாகவும் மின் கணக்கீட்டு அட்டையை சோதிக்க வேண்டும் என்றும் கேட்டனர். இதை நம்பி அவர்களை தாமோதரனின் மனைவி சந்தியா வீட்டுக்குள் அனுமதித்தார். அப்போது கொள்ளையர்கள் 2 வயது குழந்தை லித்தீஷின் கழுத்தில் கத்தியை வைத்து, வீட்டில் உள்ள நகை, பணத்தை தந்து விடுமாறு சந்தியாவிடம் மிரட்டினர். இதையடுத்து சந்தியா தந்த பீரோ சாவியை வாங்கி, அதிலிருந்த 50 சவரன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளியை கொள்ளையடித்துச் சென்றனர். இதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் முயற்சியை காவல் துறையினர் தொடங்கியுள்ளனர்.