தமிழ்நாடு

சென்னை சில்க்ஸ் புதிய கட்டிடத்திற்கு எப்படி அனுமதி? - உயர்நீதிமன்றம்

webteam

தீ விபத்து ஏற்பட்ட போது தீயணைப்பு வாகனங்கள் நுழைய முடியாத நிலை இருந்ததாக, தீயணைப்புத் துறையே தெரிவித்திருக்கும் போது, மீண்டும் சென்னை சில்க்ஸ் புது கட்டிடத்திற்கு அனுமதியளித்தது எப்படி என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  

தீ விபத்திற்குள்ளான இடத்திலேயே விதிகளை மீறி சென்னை சில்க்ஸ் நிர்வாகம் புதிய கட்டிடம் கட்டுவதற்கு தடைக் கோரி கண்ணன் மற்றும் பாலச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்நிலையில் வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  பெரிய ஜவுளி மற்றும் நகைக் கடைகளின் ஏதேச்சதிகாரம், மாவட்ட தலைநகரங்களை  விட்டு வைக்கவில்லை. சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதால் இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். 

மேலும் தீ விபத்து ஏற்பட்ட போது தீயணைப்பு வாகனங்கள் நுழைய முடியாத நிலை இருந்ததாக அரசு அமைப்பான தீயணைப்புத்துறையே தெரிவித்திருக்கும் போது, சென்னை சில்க்ஸ் புது கட்டிடத்திற்கு அனுமதியளித்தது எப்படி? என்றும் கேள்வி எழுப்பினர்.